126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்

(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 126 வால்மீகி இராமாயணம் மூல நூலன்று.  பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்.  திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன்   எலனை…

110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த…

108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்: “இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்: சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ  இந்துக்களையா….? அதே சிவராத்திரிக்கும்  பிள்ளையார் சதுர்த்திக்கும்  வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….? அல்லது இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….? மேற்கண்ட இவை எதையுமே எப்போதும்…

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்      உயிர் செகுத்து உண்ணாமை…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 3

(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி மூன்று துறவகத்தில் இலவா, குசா இரட்டையர் பிறப்பு  இடம்: வால்மீகி முனிவரின் துறவகம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதையை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.  பெண்சீடர்கள்: மகரிசி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது….