வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4. தொடர்ச்சி)     வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)   வாழ்க்கைத் துணைநலம்                   இல்லற வாழ்க்கை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழும் வாழ்க்கையாகும். இருவருள் ஒருவர் இல்லையானாலும் இல்லறம் சிறப்புறாது. இல்வாழ்வு அமையப் பெறுவதற்கே இருவரும் ஒன்று கூட வேண்டும். இல்லற வாழ்வில் இருவருமே தலைவர்கள். கணவன் தலைவன்; மனைவி…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்

(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால்            002 இல்லற இயல் அதிகாரம்     006. வாழ்க்கைத் துணை நலம்        கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.     மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்    வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.          மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு        தகுதியள்; நலம்சார் துணை.   மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,      எனைமாட்சித்(து) ஆயினும் இல்.          இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,        மற்ற சிறப்புகளால்…