திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு

  “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் விசயகாந்து தெரிவித்தார். தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர்  சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு  திரட்டினார். அப்போது, விசயகாந்து பேசிய தாவது: “தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே…

நாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்!

  மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த  ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:-  “குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில்  கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில்  முன்னேற்றம் அடையவில்லை.  அதேபோல், தமிழ்நாடு  அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள்….