கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்
(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம்…
நீறு பூத்த நெருப்பு 2/2 – புகழேந்தி தங்கராசு
(நீறு பூத்த நெருப்பு 1/2 தொடர்ச்சி) நீறு பூத்த நெருப்பு 2 எட்டுக் கோடித் தமிழக மக்களின் முதல்வராயிற்றே – என்று கூடப் பாராமல், உடன்பிறந்தாள் செயலலிதா குறித்துப் பொறுக்கித்தனமாக நையாண்டிச் சித்திரம்(கார்ட்டூன்) போட்ட திவயினதான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் ௨௦(20) ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாதவர்கள் மீது ‘புலிகள்’ என முத்திரை குத்தப் பார்க்கிறது. சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி ஆணையிட்டு விட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை…
நீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு
நீறு பூத்த நெருப்பு 1 ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…
