104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 இந்திய அரசியல் யாப்பு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் முதலாவது சம உரிமைாகும். இதற்கு மாறாக வருண வேறுபாட்டைக் கூறும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே. இந்திய அரசியல் யாப்பு தரும் மற்றோர் அடிப்படை உரிமை தற்சார்பு உரிமையாகும்(Right to freedom) சனாதனம் என்பது பிராமணரையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிறது. அரசியல் யாப்பிற்கு எதிரான இதை எதிர்ப்பது முறைதானே. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன்…