வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி) வெருளி நோய் 504-508 எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம்…
வெருளி நோய்கள் 476-478 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 471-475 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 476-478 பல்லி, பாம்பு முதலான ஊர்வனமீதான அச்சமே ஊர்வன வெருளி.விலங்கு வெருளி, சிலந்தி வெருளி போன்றதே இதுவும். ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். இயல்பிலேயே அச்ச உணர்வு உள்ளவர்களுக்குப் பாம்பு முதலான ஊர்வன மீது பேரச்சம் வருவது இயற்கைதானே.பாம்பை அடித்துவிட்டு அது தப்பித்துச் சென்று விட்டால் மீண்டும வந்து பழிவாங்கும்; ஒரு பாம்பைக் கொன்றால் அதன் துணை நம்மைத் தேடி வந்து கொல்லும்; கொம்பேறி மூக்கன் என்னும் பாம்பு கொத்திய பிறகு மரத்தில்…
வெருளி நோய்கள் 466 – 470 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 461 – 465 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 466 – 470 466. ஊக்கிசை வெருளி – Zorevophobia ஊக்கிசை (Jazz Music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஊக்கிசை வெருளி.முதலில் அகராதிப் பொருள் அடிப்படையில் ஆரவார இசை எனக் குறிப்பிட்டிருந்தேன். இயாசு / jazz என்பதன் மூலப் பொருள் ஊக்கம் என்பதாகும். எனவே, ஊக்குவிக்கும் இவ்விசையை ஊக்கிசை எனக் குறித்துள்ளேன்.00 ஊஞ்சல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊஞ்சல் வெருளி.ஊஞ்சல் ஆடும் பொழுது கீழே விழ நேரிடலாம், ஊஞ்சல் சுற்றிக் கொள்வதால்…
வெருளி நோய்கள் 461 – 465 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 456 – 460 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 461 – 465 உறைபனி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி வெருளிசிலர் பனிக்கட்டி தொடர்பான பனிச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் மரணப் பயத்தைச் சந்திருக்கலாம் அல்லது பனிச் சூழல் காரணமாகச் சாலை வழுக்கல் போன்றவற்றால் ஊர்தி நேர்ச்சி(விபத்து) நேர்ந்திருக்கலாம் அல்லது பனி தொடர்பான நோய்களோ இன்னல்களோ பிறருக்கு வந்ததைக் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கதைகளில் படித்தோ திரைக்காட்சிகளில் பார்த்தோ இருக்கலாம். இதனால் அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுள் பலர் பனிபாலேட்டைக்கூட(ice cream) உட் கொள்ள…
வெருளி நோய்கள் 456 – 460 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 456 – 460 456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர்…
வெருளி நோய்கள் 451 – 455 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 446 – 450 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 451 – 455 மன உலைச்சல்(anxiety) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உலைச்சல் வெருளி. உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உலைச்சல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.மன உளைச்சலானது சுற்றுச்சூழல், தனிப்பட்ட காரணிகள், குடும்பச் சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள், வேலையில் அதிக அழுத்தம், குமுகப் புறக்கணிப்பு, தனிப்பட்ட துயரங்கள், சோர்வு போன்ற காரணங்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். பதற்றம் கொள்கின்றனர். அளவுகடந்தபதற்றமும் மன உலைச்சலும் மன நோய் வரவும் காரணமாகின்றன.00 உழுவை(Tractor) தொடர்பான மிகையான…
வெருளி நோய்கள் 446 – 450 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 441-445 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 446 – 450 உலர் சளி தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் உலர்சளி வெருளி.சளியில் உள்ள தொற்றுயி நுண்மிகள் மூலம் பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் பரவுவதால், சளிமீதான பேரச்சம் வருகிறது. இருமலைத் தூண்டும்; சோர்வை உண்டாக்கும்; பொதுவான நலிவை ஏற்படுத்தும்; பல நாட்களுக்கு உடலைப் பாதிக்கக்கூடும்; என்ற காரணங்களால் உலர்சளி மீது பேரச்சங்கள் வருகின்றன.Nakusophobia என்பதையும் உலர்சளி வெருளி என முன்பதிப்பில் குறித்திருந்தேன். எனினும் இதை ஆசனவாய் வெருளி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே…
வெருளி நோய்கள் 361-365 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி) 361. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். எனவே, இக்குறைபாடுகள் நேரும்…
வெருளி நோய்கள் 251 – 255 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 246 – 250 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 251 – 255 251. ஆட்ட ஊர்தி வெருளி – Gelandelimophobia விளையாட்டுப்பயன்பாட்டு ஊர்தி(SUV) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆட்ட ஊர்தி வெருளி. விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி என்பதை வி.ப.ஊ. எனச் சுருக்கமாகக் கூறலாம். [Sport utility vehicle (SUV)] 00 252. ஆட்ட வெருளி – Ludophobia / Athlemaphobia/ Athlematophobia ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆட்டவெருளி விளையாடும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தோல்வி மீதான பயம் போன்றவற்றால் விளையாட்டு…
வெருளி நோய்கள் 206 -210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 201 -205 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 206 -210 அல்பேனியா(Albanai) மாநிலம் தொடர்பான காரணமற்ற அளவற்ற பேரச்சம் அல்பேனிய வெருளி..அல்பேனியக் குடியரசு (Republic of Albania) ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நாடாகும். இதன் தலைநகரம் திரானா(Tirana).அல்பேனிய (Albania)நாடு, நாட்டிலுள்ள மலைகள், மக்கள், கொடி, நாகரிகம், பண்பாடு, வணிகம் முதலானவை மீது தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.அல்பேனியர்கள், அல்பேனியாவில் மட்டுமல்லாமல் கொசாவா(Kosovo[a]), மாசிடோனியா(Macedonia), மாண்டெனெகிரோ (Montenegro), செர்பியா(Serbia), குரோட்டியா(Croatia), கிரீசு(Greece), இத்தாலி(Italy) நாடுகளிலும் வசிக்கின்றனர். இங்குள்ளோர்களில் பலருக்கு அல்பேனிய வெருளி உள்ளது….
வெருளி நோய்கள் 201 -205 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 196 -200 தொடர்ச்சி) (வெருளி நோய்கள் 196-200 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 201 -205 201. அலை பேசி வெருளி-Nomophobia (no-mobile-phone phobia) அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி. அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது. அலைபேசி இயங்கா வெருளி என்பது சுருக்கமாக அலைபேசி வெருளி…
வெருளி நோய்கள் 196 -200 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 191 -195 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 196 -200 196. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பார்கள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.வெளி நாடுகளில் அங்குள்ள தாய்நாட்டாருக்கு அயலிந்தியர் தங்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு முதலானவற்றைப் பறிக்கின்றனர் என்ற வெருளியும்…