வெருளி நோய்கள் 261 – 265 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 256 – 260 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 261 – 265 261. ஆமை வெருளி – Chelonaphobia ஆமை, கடலாமை பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஆமை வெருளி. 00 262. ஆய்வக வெருளி – Laboratoryphobia ஆய்வகம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஆய்வக வெருளி. வேதியப்பொருள்கள்(chemicals) மீதான ஒவ்வாமை, பேரச்சம் உள்ளவர்கள் ஆய்வகம் அல்லது ஆய்வுக்கூடம் பற்றிப் பேரச்சம் கொள்கின்றனர். ஆய்வின் பொழுது தவறு நேர்ந்து தீய வாயு வெளியேறும், தீப்பிடிக்கும், கண்ணாடிக் குடுவைகள் உடைய நேரிடும், இவற்றால் உடலுக்குத்…

வெருளி நோய்கள் 221 -225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 216 -220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 221 -225 அழுக்குச் சமை கலன் அல்லது தூய்மையற்ற உண்கலன்கள், ஏனங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அழுக்கு ஏனங்கள் வெருளி.அழுக்குச் சமை கலன் வெருளி என முதலில் நேர் பொருளாகக் குறித்திருந்தேன். பொதுவான ஏனம் என்னும் சொல்லைப் பயன் படுத்துவே சிறப்பு என்பதால் இப்பொழுது அழுக்கு ஏனங்கள் வெருளி என மாற்றியுள்ளேன்.சமைத்த பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், வட்டில்கள், குவளைகள் முதலியன கழுவப்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, வீட்டிலோ உணவகங்களிலோ தூய்மைக் குறைவான…

வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 216-220 அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.00 அழி பொருள் தொடர்பான அளவுகடந்த…

வெருளி நோய்கள் 211 -215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 206 -210 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 211 -215 அவாய்த்தீவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அவாய் வெருளி.அவாய்(Hawaii) ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959இல் இணைந்த தீவுக்கூட்டம். வட பசிபிக்கு கடலில் அமைந்துள்ள இதன்தலைநகரம ஆனலூலூ(Honolulu).அவாய்த்தீவு, அதன் மக்கள், மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பினால் விளைவது.00 மருத்துவ ஆய்விற்காக உடைகளைக் கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று…

வெருளி நோய்கள் 156 -160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 156 -160 156. அடுப்பு வெருளி – Kouziphobia   அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி. அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எரிவளி அடுப்பு என்று இல்லை….

வெருளி நோய்கள் 151 -155 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 146 -150 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 151 -155 151. அடிபந்தாட்ட வெருளி – Baseballphobia  அடி பந்தாட்டம்(Baseball) குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அடி பந்தாட்ட வெருளி. எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்விையச் சந்திக்க நேருமா என்ற கவலை வருவது இயற்கை. அடி பந்தாட்டத்தில் பந்து படக்கூாத இடத்தில் பட்டுவிடுமோ, பந்தால் காயம் ஏற்படுமோ, அடுத்தவருக்குக் காயத்தை ஏற்படுத்தி அதனால் சண்டை வருமோ என்றெல்லாம் தேவையின்றிக் கவலைப்படுவோர் உள்ளனர். சிறு பருவத்தில் இவ்வாறு நேர்ந்ததாலோ அல்லது…

வெருளி நோய்கள் 146 -150 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 141 -145 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 146 -150 146. அஞ்சல் முத்திரை வெருளி – Grammatosimophobia அஞ்சல் முத்திரை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் முத்திரை வெருளி. பொதுவாக அஞ்சலகங்களில் பணியாற்றுவோருக்கே அஞ்சல் முத்திரை வெருளி வருகிறது. அஞ்சல் முத்திரை இடுவதற்குப் போதுமான மை பயன்படுத்தப் பட்டதா? அஞ்சல் முத்திரை தெளிவாக விழுந்திருக்குமா? அஞ்சல் முத்திரை மையால் ஒவ்வாமை ஏற்படுமா என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர். 00 147. அஞ்சல் வெருளி –  Postalphobia  அஞ்சல் தொடர்பான…

வெருளி நோய்கள் 141 -145 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 141 -145 141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி. இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான். counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக. 00 142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia  அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி. pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான…

வெருளி நோய்கள் 136 -140 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 131 -135 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 136 -140 136. அகற்றல் வெருளி – Disposophobia தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படுதல் அல்லது காணாமல் போதல் தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அகற்றல் வெருளி. முதலில் இதை இன்மை வெருளி எனக் குறிப்பிட்டேன். ஆனால், இன்மை வெருளி(nihilophobia / Tipotaphobia/Nullophobia) எனத் தனியாக உள்ளதாலும் இல்லாமையைக் குறிக்கும் இன்மை வெருளியாகக் கூறாமல் இருந்த பின் இல்லாது போதலைக் குறிப்பதால் தனியாகக் குறிக்க வேண்டும் என்பதாலும் இப்பொழுது அகற்றல் வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது. dispos…