திருக்குறளும் பொது நோக்கமும் 2 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

  (வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)   ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதனைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக்காட்டி, ‘கூடா வொழுக்க’த்திற் கண்டிக்கப்பட்ட போலித் துறவொழுக்கம் உலகத்தாரை ஏமாற்றுவதற்கே உரியது என்பதனையும் உலகத்துக்குப் போதித்து ‘மனத்துக்கண் மாசிலராகிக்’ குணமென்னும் குன்று ஏறி நின்ற திருவள்ளுவர், அனைவரும் ஏற்றுக் கொண்டு கையாளுதற்குரிய ஒழுக்கமுறை வகுத்தது ஒருவியப்பன்று, தம் வாழ்க்கைப் பட்டறிவையே யாம் பெற்ற பேறு பெறுக இவ்வகையம் என்று சுரந்தெழும் அருள் மிகுதியினால், திருவள்ளுவர் அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்க முறையாக…

வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் “தமிழி” என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும்  தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி  பின்வருமாறு பேசினார்: பழமையான 4 வேதங்களும் சமசுகிருதத்தில் எழுதப்படவில்லை. அவை “தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமசுகிருதம் தெரிந்த அறிஞர்களிடம்…