133/133. பிராமணர்கள் தமிழர்களா? அவர்கள் யார்? – சனாதனம் நிறைவு
(132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – தொடர்ச்சி) முதல் வினா இன்னும் சற்றே விரிவாகக் கேட்க வேண்டியது. ஏன் தமிழர்களா? என்று மட்டும் கேட்கிறீர்கள்? • பிராமணர்கள் தமிழர்களா? பிராமணர்கள் மலையாளிகளா? பிராமணர்கள் தெலுங்கர்களா? பிராமணர்கள் கன்னடர்களா? பிராமணர்கள் துளுவர்களா? பிராமணர்கள் மராத்தியர்களா? பிராமணர்கள் குசராத்திகளா? பிராமணர்கள் வங்காளிகளா? ….. பிராமணர்கள் காசுமீரிகளா? …… இப்படி நீண்டுகொண்டே போகவேண்டும் உங்கள் கேள்வி. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். ஏனைய மாநிலங்களில் இக்கேள்வி உள்ளீடாகத் தொக்கி நிற்கின்றது. புலம் பெயர்ந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் சென்ற பிறகும்…