அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 50. வேலை வாங்கும் முதலாளி தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி. ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார். அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக்…