128/133 அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

(127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?  – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே. ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம்…

வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்! – சி.இலக்குவனார்

வள்ளுவர்  வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்   வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும்.  அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதி்ரைகளைக் கொன்றனர். மக்கள் நலன்அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா?  பேரருளாளர் வள்ளுவர்…