தலைநகர்த்தமிழ்ச்சங்கம் – பெரியபுராணச் சொற்பொழிவு 3
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 மாலை 5.00
ந.மணிமொழியன் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழா – படங்கள்.
உலகத்திருக்குறள் பேரவை சார்பில் அதன் பொதுச்செயலர் ந.மணிமொழியனின் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழாவை முன்னிட்டு ஐந்து நாள் திருக்குறள் திருவிழா கடந்த திங்கள் நடைபெற்றது. நிறைவுநாளில் இலக்கியச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கவியரசு நற்பணிமன்றத்தலைவர் இரா.சொக்கலிங்கம் தொடக்கவுரை யாற்றினார். நகைச்சுவைப் பேரரசர் முனைவர் கண.சிற்சபேசன் நடுவராக இருந்து தமிழ்இலக்கியம் அழகு விருந்தா? அறிவு மருந்தா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. முனைவர் இரா.மோகன் பொன்.சந்திரசேகரன், கவிஞர் இரா.இரவி, முனைவர நிருமலா மோகன், ச.செந்தூரன், ச.திருநாவுக்கரசு ஆகியோர் வாதிட்டனர். கவிஞர் அசோக்குஇராசு நன்றி நவின்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட…
