எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில் திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல. insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பது. நொடிப்பு என்று சொல்லலாம். இந்த நிலைக்கு ஆளானவர் insolvent – நொடித்தவர் எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம் நொடித்துப் போனவர் >…