வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 216-220 அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.00 அழி பொருள் தொடர்பான அளவுகடந்த…
கலைச்சொல் தெளிவோம்! 84. அழிவுவெருளி-Atephobia
84. அழிவுவெருளி-Atephobia அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய…