(வெருளி நோய்கள் 146 -150 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 151 -155 151. அடிபந்தாட்ட வெருளி – Baseballphobia  அடி பந்தாட்டம்(Baseball) குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அடி பந்தாட்ட வெருளி. எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்விையச் சந்திக்க நேருமா என்ற கவலை வருவது இயற்கை. அடி பந்தாட்டத்தில் பந்து படக்கூாத இடத்தில் பட்டுவிடுமோ, பந்தால் காயம் ஏற்படுமோ, அடுத்தவருக்குக் காயத்தை ஏற்படுத்தி அதனால் சண்டை வருமோ என்றெல்லாம் தேவையின்றிக் கவலைப்படுவோர் உள்ளனர். சிறு பருவத்தில் இவ்வாறு நேர்ந்ததாலோ அல்லது…