(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 246 – 250 246. ஆசிரியர் வெருளி – Lusuophobia தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி. சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ…