தமிழர் வாணிகம் 1 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 14. வாணிகம் மக்கள் நல்வாழ்வில் சிறப்புப்புற்று ஓங்குவதற்கு அவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் எக்காலத்தும் குறைவின்றிக் கிடைத்தல் வேண்டும். ‘நாடென்ப நாடா வளத்தன’ என்று திருவள்ளுவர், குறிக்கோள் நாட்டைப்பற்றிக் கூறியிருப்பினும், ஒரு நாடு தன் மக்களுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் என்பது அரிதே. நாட்டில் உள்ள நகரங்களும் ஊர்களும் அவ்வாறே மக்கள் வாழ்வுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாது. ஆதலின், ஒரு…
தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 24 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி) பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில், “அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய்…
தமிழர் நாகரிகம் (தொடர்ச்சி)–சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 21 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 22 11. நாகரிகம் (தொடர்ச்சி) அணிகலன்கள் அணிந்து கொள்வதில் ஆடவரும் பெண்டிரும் பெருமகிழ்வு காட்டினர். தலைமுதல் கால் வரையில் அணியக்கூடிய அணிகலன்களைப் பெற்றிருந்தனர் (புறநானூறு-378). அணிகலன்கள் பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்யப்பட்டிருந்தன (குறிஞ்சிப் பாட்டு ). மணமகளுக்குத் தாலியணிதலும் அதனை ‘ஈகை யரிய இழையணி’(புறநானூறு-127) எனலும் உண்டு. மணமகன், மணமகளுக்குக் கையுறையாக அணிகலன்கள் அளித்தலும் அவற்றுள் காதலை அறிவிக்கும் அடையாளம் பொருந்திய மோதிரம்…
தமிழர் நாகரிகம்– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 20 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 21 11. நாகரிகம் பண்பாடு அகத்தின் – உள்ளத்தின் – தொடர்புடையது. நாகரிகம் புறத்தின் பாற்பட்டது. உணவு, உடை, அணிகலன்கள், வசதி, வாய்ப்புகள், ஊர்தி, வீடு, நகர், வாழ்க்கைமுறை முதலியவற்றின் சிறப்பால் அறியப்படுவது. உள்ளச் சிறப்பால் உரையாலும், செயலாலும் பண்பாடு வெளிப்படும். செல்வச் செழிப்பால் நாகரிகம் உயர்ச்சியும் வளர்ச்சியும் பெறும். பண்பாட்டால் நாகரிகம் மாற்றமுறுதலும், நாகரிகத்தால் பண்பாடு வெளிப்படுதலும் உண்டு. …
தமிழர் மெய்யுணர்வுக்கொள்கை (தொடர்ச்சி)-சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 18 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 19 9. மெய்யுணர்வுக் கொள்கை (தொடர்ச்சி) “பொருள்நிலை சீருறின் உலகப் பொல்லாங்கு எல்லாம் ஒழியும்” எனும் பொருளுரையைப் போற்றாதார் தம்மைப் போற்றாதாரே. எனவே, இதனை நன்கு வற்புறுத்தினர் சங்க காலப் பெரியோர்கள். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினைக் கைம்மிக எண்ணுதி” (குறுந்தொகை-63) “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்” (நற்றிணை-214) என உழைத்துப் பொருளீட்டாதார்க்கு…
தமிழர் மெய்யுணர்வுக் கொள்கை – சி.இலக்குவனார்
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 18 (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 17 – தொடர்ச்சி) வாழ்வியல் உண்மைகளை மக்களுக்கு அறிவுறுத்த முற்படுபவர்கள் சான்றோர்கள் எனச் சிறப்பிக்கப்படுவார்கள். இவர்களே உயர்ந்தோர் என மதிக்கப்படும் தகுதியுடையவர்கள். இவ் வுயர்ந்தோர் வழியே ஏனையோர் செல்லுதல் வேண்டும் என்பது பழந்தமிழர் கொள்கை. உயர்ந்தோர் வழக்குத்தான் உலக வழக்காகக் கருதப்பட்டது. உலக நிகழ்ச்சியை இயக்க வேண்டியவர்கள் உயர்ந்தோர்களே என எண்ணினர். “வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான” (தொல்காப்பியம், பொருளதிகாரம்,…
இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 15 7. இல்லறம் ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும். இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும். மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு. மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது. நாளாக நாளாக அறிவு…
இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர். கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் ” ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும். அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “ உற்றுழி உதவியும்…
ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!
ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்! உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கைத் தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்! என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக்…
நீர்வளத் தேவையை உணர்ந்த சங்க மன்னர்கள் – பேரா.சி.இலக்குவனார்
நல்லரசை விளக்கும் சங்க இலக்கியம் – பேரா.சி.இலக்குவனார்
போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69 இன் தொடர்ச்சி)