வெருளி நோய்கள் 221 -225 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 216 -220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 221 -225 அழுக்குச் சமை கலன் அல்லது தூய்மையற்ற உண்கலன்கள், ஏனங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அழுக்கு ஏனங்கள் வெருளி.அழுக்குச் சமை கலன் வெருளி என முதலில் நேர் பொருளாகக் குறித்திருந்தேன். பொதுவான ஏனம் என்னும் சொல்லைப் பயன் படுத்துவே சிறப்பு என்பதால் இப்பொழுது அழுக்கு ஏனங்கள் வெருளி என மாற்றியுள்ளேன்.சமைத்த பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், வட்டில்கள், குவளைகள் முதலியன கழுவப்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, வீட்டிலோ உணவகங்களிலோ தூய்மைக் குறைவான…