(பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள்,தொடர்ச்சி) நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே! நலம்சார் பொருளியல் (Normative Economics) குறித்து ஆடம் சுமித், ஆல்பிரட்டு மார்சல் முதலானவர் கருத்துகளை முன்னரே தமிழ் இலக்கியங்கள் தெளிவாக்கியுள்ளதை  நாம் பார்த்தோம். இவர்களுக்குப் பின்னர் வந்த அறிஞர்கள் பொருளியல் இயல்புரை அறிவியலா? நெறியுரை அறிவியலா? (Positive Science or Normative Sciene)எனக் கேள்வி கேட்டனர். பொருளியல் ஒரு புறம் உள்ளதை உள்ளவாறு ஒழுங்குபடுத்தப்பட்டு விளக்கும் அறிவியல் என்றனர். மறு புறம் , ஆசிமாகாபுளசு (Asimakopulos) என்னும் அறிஞர்   பொருளியல் எதுவாக இருக்க…