அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – இலக்குவனார் திருவள்ளுவன்
(புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – தொடர்ச்சி) சேம அச்சு ஆங்கிலத்தில் இஃச்டெப்னி (stepney) என்றால் வழக்கத்தில் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட துணையைக் குறிப்பதாக மாறிவிட்டது. என்றாலும் ஊர்திகளில் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதே உண்மை.வால்டர் தேவீசு (Walter Davies) என்பவர் தாம் (Tom) என்பவருடன் சேர்ந்து இங்கிலாந்திலுள்ள வேல்சு நகரின் இலாநெல்லி (Llanelli) பகுதியில் இஃச்டெப்னி (stepney) தெருவில் 1895இல் இரும்புப் பொருள்கள் கடை தொடங்கி 1902இல் வாடகை ஊர்திப் பிரிவையும் தொடங்கினர். 1904இல் நீதிபதி ஒருவர் வாடகைக்கு எடுத்த ஊர்தியின் (சக்கரத்தின்) புறவட்டில்…
புறநானூற்று அறிவியல் வளம் -இலக்குவனார் திருவள்ளுவன்
புறநானூற்று அறிவியல் வளம் அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன. சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய…