வெருளி நோய்கள் 141 -145 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 141 -145 141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி. இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான். counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக. 00 142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி. pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான…