(வெருளி நோய்கள் 166 -170 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 171-175 தவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.நகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும். அண்டையர் வெருளி என்பது வீட்டிற்கு அருகே குடி இருப்பவர்களைப் பற்றிய பேரச்சம். அண்மையர் வெருளி என்பது நமக்கு அருகில் இருப்பவர்களைப் பற்றிய பேரச்சம்.காண்க: அண்டையர் வெருளி – Geitophobia00 வாயில் உண்பிசினை அதக்குதல்(chewing) அல்லது அதுக்குதல் -மெல்லுதல்…