புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – அன்றே சொன்னார்கள் 33 – இலக்குவனார்திருவள்ளுவன்

(திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – தொடர்ச்சி) புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! புதன் கோளுக்கு ஆங்கிலத்தில் மெர்க்குரி எனப் பெயர். மெர்க்குரீஇசு(Mercurius) என்னும்  இலத்தீன் சொல்லில் இருந்து இச் சொல் உருவானது. மெர்க்குரி எனப்படும் புதன் கோள் வணிகக்கடவுளாகவும் தூதுத் தேவதையும் மைய்யாவின் (Maia) மகனுமாகும். கிரேக்க, உரோமன் தொன்மக்கதைகள் போன்றுதான் ஆரியக்கதையும் இயற்கைக் கோள்களைத் தெய்வப் பிறப்பாக அல்லது தேவதைகளாகக் கற்பனைச் சிறகெடுத்துச் சொல்லப்படும். பின்னர் ஆரியத்தாக்கத்தால் கோள்களைப் பற்றிய மூடக் கதைகள் தமிழிலும் இடம் பெற்றிருந்தாலும் தொடக்கத்தில் அறிவியல் அடிப்படையில்தான்…

திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…

எழுத்தைக் காப்போம்! : அன்றே சொன்னார்கள் 30  – இலக்குவனார் திருவள்ளுவன்

(செய்க பொருளை!-தொடர்ச்சி)     எழுத்தைக் காப்போம் !                                                                                                       உலகம் பார்வைகள் இணைக்கப்பட்ட பட்டை. ஒவ்வொரு மொழியும் மறையும் பொழுது அதற்குரிய பார்வைப் பகுதியை இழந்து விடுகிறது என்கிறார் பிரான்கோயிசு (Franபois Grosjean 1946, மேனாள் இயக்குநர், மொழி-பேச்சு ஆய்வகம், சுவிட்சர்லாந்து) மொழியைக் கண்ணாகக் கருதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு              ( திருக்குறள் 392) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதனையே ஔவையார்  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்…

செய்க பொருளை!: அன்றே சொன்னார்கள்- இலக்குவனார் திருவள்ளுவன்

(செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்- தொடர்ச்சி) செய்க பொருளை! பொருளியலுக்கான இலக்கணத்தை வரையறுக்கும் பொழுது பொருளியல் அறிஞர் ஒருவர், பொருள் பகைவரை அழிக்கும் ஆயுதம் என்றார். சான்றோர் சிந்தனை, கால எல்லைகளைத் தாண்டியும் ஒன்றுபடும் என்பதற்குச் சான்றாக அல்லது பழமைக்கும் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் திகழும் சங்க இலக்கியச் சான்றோர் மொழிகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ள  பெருமைக்குச் சான்றாக எடுத்துக் கொள்ள சில இலக்கிய வரிகளை நாம் காணலாம். பகைவரின் தருக்கை அழிக்கும் கூரிய படைக்கலம் பொருள்; ஆதலின் பொருளை உண்டாக்குக…

செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்-அன்றே சொன்னார்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள்  – தொடர்ச்சி) செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர் பொருள் பெற உழைப்பும் பெற்றபின் பகிர்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பொருளியல் அறிஞர்கள் கருத்து. பொதுநலப் பகிர்விற்காகப் பொருளைத் திரட்டும் உழைப்பே தமிழரின் முதன்மை நோக்கமாகும். நம் முன்னோர் பேராசையினால் செல்வம் சேர்க்க எண்ணியதில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே செல்வத்தைத் திரட்ட முயன்றனர். அதே நேரம் காதல் இன்பத்தினும் இல்லற இன்பத்தினும் செல்வம் உயர்ந்ததில்லை என்ற மனப்பான்மையும் இருந்துள்ளது. ஆனால், இந்த எண்ணத்தினால் எவ்வகை முயற்சியும்…

மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் – அன்றே சொன்னார்கள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தாழிமரம் அறிவோமா? bonsai  – தொடர்ச்சி) மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் அன்றே சொன்னார்கள் 10                                                                                                                  இன்றைய அறிவியல் அறிஞர்கள் செயற்கையாக மழை பொழியச் செய்கிறார்கள். மழை வேண்டாத பொழுது இயற்கையாகப் பெய்வதற்குரிய முகில் கூட்டத்தை – மேகக் கூட்டத்தை – இடம் பெயரச் செய்து அந்தப் பகுதியில் மழை பெய்ய விடாமல் செய்கிறார்கள்.  என்ற பொழுதும் பழங்காலத்தில் மழைபற்றிய  அறிவியல் உணர்வு பிற நாட்டாரிடம் இல்லை.  உரோம் மக்களின் மழைக்கடவுள் பெயர்  பொசெய்டன்…

தாழிமரம் அறிவோமா? – bonsai – அன்றே சொன்னார்கள் 14 (விரிவு)

தாழிமரம் அறிவோமா? bonsai அன்றே சொன்னார்கள் 14 தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது….

அன்றே சொன்னார்கள் – காற்றின் வகைமை தெரியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! –தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் –காற்றின் வகைமை தெரியும்! காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில்  வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது. கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோருட்டு (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப  வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார். வீச்சு எண்…

அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – தொடர்ச்சி)   அன்றே சொன்னார்கள்முகிலறிவியலின் முன்னோடி நாமே!  வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம்  நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர்  இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும்…

சேமக்குடுவையின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்

(உயிரறிவியலின் முன்னோடி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் 5 சேமக்குடுவையின் முன்னோடி  அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர்  சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை…