(வெருளி நோய்கள் 176 -180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 181 -185 181. அந்துப்பூச்சி வெருளி – Mottephobia அந்துப்பூச்சி மீதான அளவுகடந்த பேரச்சம் அந்துப்பூச்சி வெருளி.அந்துப்பூச்சி/விட்டில் பூச்சி(Moth) என்பது பட்டாம்பூச்சி வகையை ஒத்தது. முதலில் இதனைப் பட்டாம்பூச்சி வெருளியில் சேர்த்திருந்தேன். அதைவிடத் தனியாகச் சேர்ப்பது நன்று என்பதால் இப்பொழுது தனியாகக் குறிப்பிட்டுள்ளேன்.motte என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அந்துப்பூச்சி.00 182. அப்பப்பா வெருளி – Zufuphobia தந்தைவழி தாத்தா / அப்பப்பா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அப்பப்பா வெருளி.தந்தையின் தந்தையை…