(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 77. இரு குரங்கின் கைச்சாறு பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான். ‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது. இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான். அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ!…