சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்
(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! “…பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…” – கபிலர், நற்றிணை 32: 7 – 9 பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு; நாடார் = ஆராயார்; ஒட்டியோர்…