104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 இந்திய அரசியல் யாப்பு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் முதலாவது சம உரிமைாகும்.  இதற்கு மாறாக வருண வேறுபாட்டைக் கூறும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே. இந்திய அரசியல் யாப்பு தரும் மற்றோர் அடிப்படை உரிமை தற்சார்பு உரிமையாகும்(Right to freedom) சனாதனம் என்பது பிராமணரையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிறது. அரசியல் யாப்பிற்கு எதிரான இதை எதிர்ப்பது முறைதானே. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன்…

54. இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.”- பன்னீர் செல்வம்.55. 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் – இரங்கராசு + 56. 56.    சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? -இரங்கராசு  : மெய்யுரை காண்க – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்

51. மசூதிகளுக்கு, தேவாலயங்களுக்குச் செல்வதைப்போல் சனாதனத்த மதிக்க வேண்டும். – மமதா பானர்சி 52. சனாதன மதம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது – மருதாசல அடிகளார் 53.   “சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை – இவற்றின் மெய் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50– தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 நச்சுப் பொருளையும் மருந்துப் பொருளையும் வேறுபடுத்தாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பது எவ்வளவு தவறோ அதுபோன்றதுதான் அவரது உரையும். சனாதனம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல் சனாதனத்தைப்பற்றிய தவறாகக் கூறப்படும் உயர்வு கருத்துகளை நம்பி இவ்வாறு கூறுகிறார். இந்த இடத்தில் தருமம் என்பது செய்கையைக் குறிக்கிறது. செய்யப்படுவதையே சிலர் கடமையாக விளக்குகின்றனர். அறம் என்பதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. சனாதன தருமம் என்றதும் தருமம் என்பதைப் பிறர்போல் அறம் என நம்பி இவ்வாறெல்லாம் தெரிவிக்கிறார். நன்கு…

45. இந்து மதம் எல்லாரையும் அரவணைக்கிறது. – நீதியர் நாகரத்தினா 46. “இந்தியா சனாதனத்தின்படி தான் இயங்குகிறது” – ஆளுநர் இரவி 47. கோயிலுக்குத் தூய்மையாக வரவேண்டும் என்று கூறுவது தவறா? – இவை பொய்யான வாதங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” .என்றார். (தெள்ளேணம் என்பது கை கொட்டிப் பாடிக்கொண்டே ஆடும் ஆட்டம்) இன்றும் இந்த நிலை தொடர்வதால்தான் இந்து மதத்தில் பலருக்குச் சகிப்புத் தன்மை உள்ளது. அவர்கள் எல்லாக் கடவுளர் கோயில்களுக்கும் செல்கின்றனர். ஆனால் இதில் பிளவை ஏற்படுத்தியதுதான் சனாதனம். அந்தப்பிளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனால் ஒற்றுமைக் குலைவு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. “அவளைத் தொட்டதனால் ஆளுநர்தான் தன் கைகளைப் பினாயில் போட்டுக்…

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? பெரியார் ஈ.வெ.இரா.குறித்து நாம் பின்வருவனவற்றை அறிவோம். 1. பெரியார் ஈ.வெ.இரா. நிறைகள் 2. பெரியார் ஈ.வெ.இரா. குறைகள் 3. பெரியார் ஈ.வெ.இரா. மீது குறைகளாகச் சொல்லப்படுவன 4. பெரியார் ஈ.வெ.இரா. குறித்த பழிப்புரைகள் பெரியார் மீதான பழிப்புரைகளையும் குறைகளாகச் சொல்லப்படுவனவற்றையும் பார்த்தாலே அவரைப்பற்றிய நிறைகளையும் நாம் அறியலாம். எனவே, மேற்குறித்தவற்றை நாம் வரிசை மாறிப்பார்க்கலாம். இதழ்களிலும் பிற…