87 & 88 சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 87 & 88 சனாதனத்தை இறை ஏற்பாளர்களும் எதிர்க்கிறார்கள். இறை மறுப்பாளர்களும் எதிர்க்கிறார்கள். எனவே, கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. பொதுவாகக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள்; தன்மதிப்பும் தன்மானஉணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சனாதனத்தை எதிர்ப்பது இயற்கை. அதற்காக இறை மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்ப்பதாகக் கருதுவது தவறே. இறையன்பர்கள் பலரும் தாங்கள் இல்லாத மேற்சாதியால் ஒடுக்கப்படுவதாகவும் இழிவுபடுத்தப் படுவதாகவும் உணர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே இறையன்பர்கள்…