நாலடி நல்கும் நன்னெறி :10 வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 10 வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்–தனக்குத்தா யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண் டேகு மளித்திவ் வுலகு -நாலடியார், இளமை நிலையாமை 15 பொருள்: எனக்குத் தாயானவள் என்னை விட்டுத் தன் தாயைத் தேடிச் சென்று விட்டாள். அவளும் தன் தாயைத்தான் தேடிச் சென்றுள்ளாள். அதுபோல் வழிவழியே முன்னவரைத் தேடிச்செல்லும் நிலையாமையை உடையது இவ்வுலகு….
நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…
