(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன  செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…