ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள்: தொடர்ச்சி) ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும் அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம். கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு…