(வெருளி நோய்கள் 396-400 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 401-405 உடன் பிறந்தவர்கள் மகன், மகள் இருவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மக்கள் வெருளி.உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மக்கள் மீது பேரச்சம் வருவது இயற்கை. மகன், மகள் என்பவற்றின் பன்மையும் இருவரையும் சேர்த்துக் குறிப்பது மக்கள் என்னும் சொல்.Nibli என்றால் உடன் பிறந்தார் மகன் அல்லது மகள் அல்லது இருவரையும் குறிக்கும்00 உடன் பிறந்தவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் வெருளி.உறவினர்கள் பகையாக…