(வெருளி நோய்கள் 401-405 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 406-410 உடுப்பு மாட்டி(coat hanger) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடுப்பு மாட்டி வெருளி.உடுப்பு மாட்டி குறித்துத் தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சமே இது.Kremastra என்னும் சொல் உடை மாட்டியைக்/ உடுப்பு மாட்டியைக் குறிக்கிறது.00 உடுமீன்(starfish) மீதான அளவுகடந்த பேரச்சம் உடுமீன் வெருளி விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும். விலங்கு வெருளியின் உட்பிரிவே இதுவும். நட்சத்திர மீன் என்று சொல்வதைவிட உடுமீன் என்பது சுருக்கமாக உள்ளது. எனவே, அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது.இரண்டும் ஒன்றுதான்.00 உடைப் பேழை குறித்த…