57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59.      சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 சனாதவாதிகளால் பாராட்டப்படும் சந்தோகிய உபநிடதம், “(கடந்த பிறவியில்) இவ்வுலகில் நற்செயல்கள் செய்தவர்கள் அதற்கேற்ப நல்ல பிறப்பை அடைகிறார்கள். அவர்கள் பிராமணராகவோ, சத்திரியராகவோ அல்லது வைசியராகவோ பிறக்கிறார்கள். ஆனால், இவ்வுலகில் கெட்ட வேலைகளைச் செய்தவர்கள், நாயாகவோ, பன்றியாகவோ, சாதியற்றவர்களாகவோ பிறந்து அதற்கேற்ப கெட்ட பிறப்பை அடைகிறார்கள்.” என்கிறது. செய்யும் கருமத்திற்கேற்ப உயர் பிராமணனாகவோ ‘இழி சூத்திரனாகவோ’ பிறப்பான் என்பதை இது கூறுகிறது. இத்தகைய உடநிடதத்தைத்தான் சிறப்பானதாக மதிப்பிற்குரிய மேதை கூறுகிறார். முதலில் உபநிடதம் பொருளைப் பார்ப்போம். உபநிசத்து என்னும்…

வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத்துத்தான் பொய்களை…

தமிழ்ச் சிறப்பை ஆரியர் தழுவினர் : மறைமலையடிகள்

  இங்ஙனம் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து, போந்த உயிர்க்கொலை­யினை நிறுத்துதற் பொருட்டாகத் ‘தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்­பட்டனவா­மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதும் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருந்தினமையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும்…