(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி) வெருளி நோய் 504-508 எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம்…