வெருளி நோய்கள் 554-558: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 549-553: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 554-558 554. ஒருக்க வெருளி – Tongyiphobia ஒருக்கம்(sameness) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒருக்க வெருளி. நம்மிடம் இருக்கும் ஆடை/நகை/பொருள்போன்ற ஒன்றைப் பிறர் வாங்கித் தருதல், நம்மிடம் இருப்பதுபோன்ற ஒன்றைப் பிறர் அல்லது பிறரிடம் இருப்பதுபோன்ற ஒன்றை நமக்கு வாங்குதல் போன்ற சூழல்களில் காரணமற்ற தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். நம் பிள்ளைகள்போல் பிறர் பிள்ளைகளும் படிப்பிலோ விளையாட்டிலோ ஒத்து இருந்தாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். ஒருக்கம்(sameness) = ஒரேபடித்தான நிலை/ஒரே தன்மை /ஒத்த தன்மை….