வெருளி நோய்கள் 569-573: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 569-573 569. ஒளி வீச்சு வெருளி – Selaphobia ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி. கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஒளி எனப் பொருள். காண்க: ஒளி வெருளி (Photophobia) 00 570. ஒளி வெருளி-Photo Phobia வெளிச்சம் கண்டு ஏற்படும்…