வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 579-583 579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி. ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம் ஓக்கலகோமா நகரம். 00 580. ஓங்கில் வெருளி – Phocodelfiniphobia / Delfiniphobia ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி. ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது. Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி…
