கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 : அன்றே சொன்னார்கள் 50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 11- தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும் பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து வீடுகளின் தொடர்ச்சியாகக்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 அன்றே சொன்னார்கள் 45 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்பண்பின் முதுகுடிநனந்தலை மூதூர் . . …..செழுநகர்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3 பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன. இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன. இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2:…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2: அன்றே சொன்னார்கள் 42 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன. பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது. மனை என்பது புலவர்களால் பல…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 : மக்களுக்குத் தேவை நல்லாட்சி!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 மக்களுக்குத் தேவை நல்லாட்சி! “அரசுமுறை செய்க களவில் லாகுக” – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார்திணை: மருதம்சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13 உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! “நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க…” ஐங்குறுநூறு – 1, 2திணை: மருதம்பாடியவர்: ஓரம்போகியார் பொருள்: உணவுக் கூலங்கள் (தானியங்கள்) பொலியட்டும் தொழற்கருவிகளுக்கான மாழைகள் (உலோகங்கள்) பெருகட்டும். பண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். எட்டுத் தொகையும் பத்துப்…
சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9-தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10 பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்! “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” ஐங்குறுநூறு 5. 2 பதவுரை : பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக. ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார். பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா?…
சங்கக்கால வாழ்த்துகள் சில!
வாணாள் வாழ்த்து பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 5 அறம் நனி சிறக்க அல்லது கெடுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 7 அரசுமுறை செய்க! களவுஇல் ஆகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 8 நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 9 மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 10 ஆயிர வெள்ள ஊழி வாழி!…
