(வெருளி நோய்கள் 644-648: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 649-653 649. கத்தரிக் கோல் வெருளி –  Psalidiphobia கத்தரிக் கோல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கத்தரிக் கோல் வெருளி. கத்தரி என்றால் (சிறிது சிறிதாய்) வெட்டியறுத்தல் எனப் பொருள். இதற்குப் பயன்படுவது கத்தரிக்கோல். ஆனால் இதனைப் பலரும் கத்திரிக்கோல் என்கின்றனர். அகராதிகளிலும் இத்தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. 00  650. கப்பல் வெருளி  – Naviphobia/Navisphobia உலாக் கப்பல், காவற் கப்பல் ஆகியவற்றின் மீதான அளவுகடந்த பேரச்சம் கப்பல் வெருளி. navis என்னும் இலத்தீன்…