தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 வரி வடிமைப்பியல் தமிழைப்போலவே கன்னடத்திலும் உள்ளமை தமிழ்மொழியின் வடிவமைப்பு முறையையே(ORTHOGRAPHY) இந்தியமொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி-வடிவமைப்பு முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும்…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 தமிழின் தாய்மையை ஒத்துக் கொள்வது பிற மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயலல்ல! “தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர். தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இது குறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்: “ஓர் அம்மாவிற்கு…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன. தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார். “இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 மூலத் திராவிட மொழி என்னும் கதை தமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதே நேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி மூலத் திராவிட மொழி என்னும் கதையை அளக்கின்றனர். “திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியை…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப்பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த மொழிகள் பிற திரிந்த மொழிகளுடன் சேர்ந்து மேலும் பலவேறு மொழிகள் தோன்றின. ஆகவே மொழிப்பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் ஒரு மொழியில்…
