உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் – யானை (1), அன்றே சொன்னார்கள் 36, இலக்குவனார் திருவள்ளுவன்
(கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்– தொடர்ச்சி) உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் – யானை(1) பயிரறிவியல் ஆக இருந்தாலும் விலங்கியல் ஆக இருந்தாலும் பழந்தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் ஆட்சி செய்துள்ளனர். உயிரினங்களின் பெயர்கள், உறுப்புகளின் பெயர்கள், தன்மை, முதலானவை வெறும் சொற்கூட்டமாகவோ ஒரு பொருளுக்கான பல பெயராகவோ பார்க்கப்படுவது தவறு. இவற்றையே நாம் பிற மொழிகளில் படிக்கும் பொழுது மிகப்பெரிய அறிவியல் உண்மைகளாகப் பார்க்கின்றோம். தமிழில் இலக்கிய வரிகளாக எண்ணிப் புறந்தள்ளி விடுகின்றோம். உவமைகள் மூலம் அறிவியல் செய்திகளை எளிய மக்களும்…
