செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி – 2 ? யார் முதலில் இந்தவேண்டுதலை முன் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா? # 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய சைவ சித்தாந்த மாநாட்டில்தான் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டிலும் 1920 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆண்டு விழாக்களின் பொழுது இதற்கான தீர்மானம்…

மறக்க முடியுமா? – தமிழவேள் உமாமகேசுவரனார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார்  காலங்களில் முரண்பாடுகள், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா இல்லையா என்பதில் முரண்பாடுகள், அப்படியே இருந்தாலும் எத்தனைச் சங்கங்கள் அல்லது சங்கம் இருந்தது என்பதிலும் கருத்து மாறுபாடுகள் இருந்தன, -இருக்கின்றன அறிஞர்களிடையே ஆனாலும், முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பாண்டியர்கள் என்பது வரலாறு. நான்காவது ‘தமிழ்ச்சங்கத்தை’ மதுரையில் நிறுவினார் பாண்டித்துரையார். உ.வே.சாமிநாதரின் தமிழ் ஆய்வும், தமிழின் முதல் கலைக்களஞ்சியமான ஆ.சிங்காரவேலு அவர்களின் ‘அபிதான சிந்தாமணி’ அச்சாகி வெளிவரவும் காரணமாக இருந்தது மதுரைத் தமிழ்ச்சங்கம். தமிழுலகின் இறுதித் தமிழ்ச்சங்கமாகவும், ஐந்தாவது தமிழ்ச்சங்கமாகவும் உருவானதுதான் ‘கரந்தைத் தமிழ்ச்சங்கம்‘. இச்சங்கம் உருவாகக் காரணமாக…

இலங்கையில் உரைநடைத்தமிழ்க்கருத்தரங்கம்

  அனைத்துலக 14ஆவது ஆய்வுமாநாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழா வைகாசி 09,2047மே 22, 2016   வவுனியா கோவில்குளம் அ/மி அகிலாண்டேசுவரர் திருக்கோவில் வவுனியா தேசியக் கல்வியியற்கல்லூரி திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழ்முகில் வாழ்வியல் திங்களிதழ் ஔவைக்கோட்ட அறிஞர் பேரவை தமிழ்ஐயா  வெளியீட்டகம்

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்   மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த…