மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்
பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் ‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள். இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்….
ஐயோ தமிழுக்கு ஆபத்து! – சுப.வீரபாண்டியன்
ஐயோ தமிழுக்கு ஆபத்து! ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும். அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் நிலை அது அன்று. தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்காமலேயே பட்ட மேற்படிப்பை முடித்திட முடியும் என்ற அவல நிலை இந்த…
மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார்…
தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்
இராபர்ட்டு கால்டுவெல் முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம், காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர். சித்திரை 26, 1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில் பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார். பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன்…
பேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்
பேராசிரியர் கா.சு.(பிள்ளை) ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர். திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர். நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா (செட்டியார்) அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின் …
மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட…
மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள். கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர். பிறந்த ஆண்டு : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம்…
ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் – எழில் இளங்கோவன்
ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்! யார் இவர்? ‘‘வடஇந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறு. தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட காலம். அந்த நாளில் கல்வெட்டுகளின் துணைகொண்டு, (தென்னாட்டு) வரலாறுகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கியவர் சதாசிவப்பண்டாரத்தார்’’ அறிஞர் மு.அண்ணாமலையின் அறிமுகம் இது. அந்தக் காலங்களில் வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழில் வரலாறுகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனை உடைத்துத் தமிழில் வரலாறுகளைத் தொடர்ந்து எழுதியவர்களுள் முதன்மையானவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். குறிப்பாக அவரின் கல்வெட்டுச் சான்றுகளும், செப்பேட்டுச் சான்றுகளும் மிக நுட்பமானவை. 1956ஆம்…
பேசு தலைவா பேசு! – சுப.வீரபாண்டியன்
பேசு தலைவா பேசு! நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ! நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன் நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…
மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி சில நாள்களுக்கு முன்னர், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப்பற்றித் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் ஒரு நிமிடச் செய்தியில் நினைவு கூர்ந்தார். தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர். மயிலை சீனிவேங்கடசாமி மார்கழி 02, 1931 / 1900ஆவது ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவரின் கல்வி 10ஆம் வகுப்பு வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. படித்தது பத்தாம் வகுப்பு…
தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! – எழில்.இளங்கோவன்
தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! கீழ்வானக் கடல்முதுகில் கிளம்பும் நெருப்புக் கோளத்தின் கதிர்விரியக் கிழக்கு திக்கும்! ஆழ்கடலின் முத்துகள் ஆடும் கொற்கை அரியணையில் தமிழ்வீற்று ஆளும் கூடல்! வாள்பறக்கும் படைகிளம்பும் வெண்ணி தொட்டு வான்முட்டும் இமயத்தை வாளால் தொட்டார்! தாள்தொட்டார் இல்லையெனத் தமிழர் கூட்டம் தோள்தொட்டார்; தைப்பாவாய் தோளே தொட்டார்! ஆரியத்தால் வீழ்ந்தோம்நாம்! அன்று சொன்ன ஆதிவேதம் புராணக்கதை அங்கே வீழ்ந்தோம்! போரிட்டால் வென்றிருப்போம்; பூனூல் தொட்டுப் பேரமைச்சே! இராசகுரு! போற்றி என்று வேரற்ற மரம்போல வீழ்ந்தோம் அங்கும்! வகுத்துரைத்தான் நால்வருணம் வீழ்ந்தோம் அன்றும்! தாருற்ற தைப்பாவாய் தோல்வி யில்லை திராவிடத்தால் எழுகின்றோம் தோற்ப தில்லை! திராவிடத்தால் எழுந்தோம்நாம் தேட்டை செய்யும் தறுக்கரைநாம் திராவிடத்தால் தள்ளி வைத்தோம்! “ஆரடாநீ சாதிசொல்ல? அற்ப மூடன் ஆரடாநீ பெண்ணினத்தை அடிமை யாக்க? ஆரடாநீ மனுவாதி? அவனின் நூலை அனலிட்டுக் கொளுத்துங்கள்; அறிவும் மானம் தேறப்பா” ஈரோட்டில் தெறித்தார் தந்தை தைமகளே தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! தமிழியம்தான் ஆரியத்தைத் தோற்க டிக்கும் தமிழியமே ஆரியமாய்த் தோன்றா மட்டும்! தமிழகத்தில் மதவாதத் தலைமைக் காகத் தமிழரிடம் சாதிவெறி தலைவி ரிக்க இமைகொட்டா விதைக்கிறது இந்துக் கூட்டம்; எதிர்த்திடுவோம்! பெரியாரின் இடது சாரித் தமிழியம்தான் பெருநெருப்பு; தமிழர் மானம்! தைப்பெண்ணே! தமிழ்க்கண்ணே! தமிழால் வாழ்த்து! வாமகளே தைப்பாவாய் வா!வா! உன்னை வாழ்த்துகின்ற தமிழரைநீ வந்து வாழ்த்து! மாமகளே! தமிழ்ப்பிறப்பே! மலர்கண் தேனே! மாவிலையும் செங்கரும்பும் மழலைக் கூத்தும் கோமகளின் வளையிசையில் குலுங்க; வாசல் கோலத்தில் புதுப்பானை; கொதிக்கும் பொங்கல்; வாமகளே தைப்பாவாய்! வந்து வாழ்த்து! வளம்பெருக நலம்சிறக்க வாழ்த்து பாவாய்! எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – புலவர் குழந்தை அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு சூலை 1ஆம் நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…
