வெருளி நோய்கள் 689-693: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 684-688: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 689-693 689. கலை வெருளி – Artemophobia கலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலை வெருளி இசை வெருளி, நாட்டிய வெருளி, நாடக வெருளி முதலான கலை தொடர்பான வெருளி உள்ளவர்களுக்குக் கலை வெருளி இருக்கவும் வாய்ப்புள்ளது. கலைகள் வழியாக ஆட்சிக்கு எதிரான புரட்சிக்குரல், கலகக் குரல், முதலானவை எழுப்பப்படும் என ஆட்சியாளர்களுக்கும் முற்போக்குக் கருத்துகள் பரப்பப்படும் என மதவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கலை வெருளி உண்டாக வாய்ப்புள்ளது. 00 690. கலைமான் வெருளி –…
