கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 : அன்றே சொன்னார்கள் 50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 11- தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும் பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து வீடுகளின் தொடர்ச்சியாகக்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 அன்றே சொன்னார்கள் 45 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்பண்பின் முதுகுடிநனந்தலை மூதூர் . . …..செழுநகர்…
வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – அன்றே சொன்னார்கள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்
(புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – தொடர்ச்சி) வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல்…
கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயரில் புலவர் சிலர் இருந்தனர்
கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயருடன் பண்டைக்காலத்தில் புலவர் சிலர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட கல்லாடர் … சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர் அனைவர்க்கும் பிற்பட்டவர் கல்லாடர். இவர் உரை, முன்னோர் உரைகளிலிருந்து தமக்குப் பிடித்தவற்றை எல்லாம் ஒழுங்கு சேர்த்து எழுதப்பட்ட உரையாக உள்ளது. … “பெயர் நிலைக்கிளவி” என்னும் சூத்திர உரை நச்சினார்க்கினியர் உரையின் எதிரொலியாகவே உள்ளது. … கல்லாடர் உரையைப் பிரயோக விவேக நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார் … எனவே, கல்லாடர் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும் பிரயோக…