வெருளி நோய்கள் 741: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 739-740: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 741 741. காத்திருப்பு வெருளி-Macrophobia நீண்ட காலக் காத்திருப்பின் மீதான இயல்பு மீறிய தேவையில்லாப் பேரச்சமே காத்திருப்பு வெருளி. பால் வாங்குவதற்கு, உணவுப்பொருள் வாங்குவதற்கு, பணம் எடுப்பதற்கு, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு, பேருந்திற்கு, தொடரிக்கு எனப் பல நேரங்கள் நாம் வாழ்வில் நம் முறை வருவதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது; மருத்துவரை அல்லது வழக்குரைஞரை அல்லது பிறரைச் சந்திக்கச் செல்லும் பொழுது நம் வரிசை வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காத்திருப்பு மனக்கவலையையும் பேரச்சத்தையும் உருவாக்குகிறது….
