82. சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது எனக் கேட்பது சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 ? 82.சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது என்கிறார்களே! “ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி…

இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்!   பேச்சுத்திறன் மிக்கவன், பொய்யை மெய்யென நம்ப வைக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான்; வறுமையில் வாழ்பவர்களையும் வளமாக வாழ்வதுபோல் நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்; இன்னலில் வாழ்பவர்களிடமே இன்பத்தில் வாழ்வதுபோல் கருத வைக்கும் வல்லவனாக இருக்கிறான். இச்சூழலில் பொய்யர்களைக் குறை சொல்வதா? தங்கள் நிலையைக் கூட உணரா மக்களுக்காக இரக்கப்படுவதா? அறியாமை இருளில் மூழ்கியிருக் கச் செய்யும் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா? பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே; மெய்போலும்மே (அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை 73)  …