காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் நளி இரு முந்நீர் ஏணி ஆக,வளி இடை வழங்கா வானம் சூடியமண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,முரசு முழங்கு தானை மூவர் (வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4) புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார். இப்பாடல் உழவின் சிறப்பையும் பல…

வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – அன்றே சொன்னார்கள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்

(புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – தொடர்ச்சி) வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்   கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல்…