(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 851-855 காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை…